சங்குப்பிட்டி பாலத்தில் எதிர் எதிரே வந்த கார்கள் மோதி விபத்துக்குள்ளானதில் கார் பாரிய சேதம் அடைந்ததுடன் அதில் பயணம் செய்தவர்கள் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளனர்.
இன்று காலை 8 மணியளவில் சங்குப்பிட்டி பாலத்தில் கார் ஒன்று வேறு வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்டுள்ளது.
அப்போது எதிரே வந்த வாகனத்துடன் மோதுண்டு கார் தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதில் பயணம் செய்தவர்கள் சிறு காயங்களுடன் வைத்திய சாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்
மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.