இனிமையான பாடல்களை பாடிய எஸ்.ஜானகி, இனிப்பாட மாட்டாராம்!

தமிழ் திரையுலகில் நெஞ்சை விட்டு அகலாத பல இனிமையான பாடல்களை பாடியவர், எஸ். ஜானகி.

அவர் இனி சினிமா மற்றும் இசை நிகழ்ச்சிகளில் பாடப் போவதில்லை என்று மலையாளப் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

27-1382851572-s-janaki-d-600தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்பட பல்வேறு மொழிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரை இசை பாடல்கள் பாடி பிரபலமானவர்.

இவர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே திரையுலகில் இருந்து விடைபெறுவதாக அறிவித்தார்.

ஆனால் நெருங்கியவர்களின் வற்புறுத்தல் காரணமாக மீண்டும் சினிமாவில் பாடினார்.

கடந்த ஆண்டு 10 கல்பனைகள் என்ற மலையாளப்படத்திலும் பாடினார்.

”இன்றைய இசை உலகில் பல பாடகர்கள் திறமையை வெளிப்படுத்தி வருகிறார்கள். சிறப்பாகவும், இனிமையாகவும் பாடுகிறார்கள்.

நான் அடுத்த வாரம் மைசூரில் நடைபெறும் அறக்கட்டளை இசை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கிறேன். அந்த நிகழ்ச்சி தான் இசை உலகில் எனது கடைசி நிகழ்ச்சியாக இருக்கும். அதன் பிறகு பொது மேடைகளில், இசை நிகழ்ச்சிகளில் நான், பங்கேற்க மாட்டேன். எளிய வாழ்க்கை வாழ விரும்புகிறேன்.

மலையாளத்தில் பல இனிமையான பாடல்களை பாடி உள்ளேன். அந்த பாடல்களில் பிரபலமான பாடல்களை மைசூர் இசை நிகழ்ச்சியில் பாடி நிறைவு செய்வேன்” என்று அவர் நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார்.