A/L பரீட்சையில் தோற்றவர் இன்று இலங்கையின் கோடீஸ்வரர்களில் ஒருவர்

A/L வில்கமுவ பிரதேசத்தில் இருமுறை உயர்தரத்தில் தோல்வியடைந்து கோடீஸ்வரராகிய இளைஞர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

வில்கமுவ பிரதேசத்தில் பிறந்து தந்தையின் தொழில் காரணமாக கண்டி பிரதேசத்திற்கு சென்ற லசந்த விக்ரமசிங்க என்ற இளைஞரே இவ்வாறு கோடீஸ்வரராகியுள்ளார்.

மாத்தளை, பாடசாலைகள் சிலவற்றில் கற்றவர், கண்டி தர்மராஜ வித்தியாலயத்தில் கல்வியை நிறைவு செய்தார்.

கண்டி தர்மராஜா வித்தியாலயத்தில் கணித பிரிவில் உயர்தரம் கற்றுள்ளார். இருமுறை உயர்தரம் பரீட்சை எழுதியும் அவரால் சித்திபெற முடியவில்லை.

இறுதியில் லசந்த முகாமையாளர் பட்டப்படிப்பை தெரிவு செய்துள்ளார். 2006ஆம் ஆண்டு அவர் முகாமைத்து பிரிவில் தொழில் பெற்றார். எனினும் அந்த தொழில் தனக்கு பொருத்தமானதாக இல்லை என எண்ணினார்.

தொழில் செய்து கொண்டிருந்த சந்தர்ப்பங்களில் அவர் இணையத்தில் சற்று நேரத்தை செலவிட்டுள்ளார்.

அப்போதைய காலப்பகுதியில் இணையத்தில் பணம் தேடுவதென்பது புதிய விடயமாக காணப்பட்டது. அதனை அனைவரும் வித்தியாசமாகவே பார்த்தனர்.

எனினும் இதனை திறம்பட செய்த லசந்த விக்ரமசிங்க இணையத்தில் ஓரளவு இலாபத்தை பெற்றார். பின்னர் தனியாகவே இணைய பயன்பாடுகள் தொடர்பில் அவர் பல விடயங்களை கற்றார்.

அதன் மூலம் கையடக்க செயலிகளை (apps) கண்டுபிடித்தவர், சர்வதேச அளவு தனது திறமையை கொண்டு சென்றார்.

ஐரோப்பா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளின் நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களையும் ஏற்படுத்தி கொண்டார்.

அவரது கண்பிடிப்பிலான செயலிகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது 9000 யூரோ வரையில் அதனை அவர் விற்பனை செய்து வருகின்றார்.

இலங்கையில் தற்போது கோடீஸ்வரர்களில் ஒருவராக மாறும் அளவில் அவர் முன்னேற்றமடைந்துள்ளார்…

625.0.560.350.160.300.053.800.668.160.90 (19)

625.0.560.350.160.300.053.800.668.160.90 (18)