யாழில் இளைஞர்மீது சுட்டவர்கள் இவர்களா? உறவினர்கள் சந்தேகம்!

யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த நிலையில் அரியாலை கிழக்கு உதயபுரம் பகுதியைச் சேர்ந்த டொன்பொஸ்கோ ரிக்மன் எனும் 24 வயதுடைய வாலிபர் யாழ் போதனா வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

இந்த நிலையில் இவருடன் கூட வந்த இளைஞரை பொலிஸார் தீவிர விசாரணைக்குட்படுத்தியிருக்கும் நிலையில் குறித்த இளைஞரைச் சுட்டவர்கள் பொலிஸ் புலனாய்வாளர்களாகத்தான் இருக்கமுடியும் என்று உறவினர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

Capturegyt;y;hபடம்: சுடப்பட்ட இடம்

யாழ்ப்பாணத்தில் துணை ஆயுதக்குழுக்களிடமிருந்து ஆயுதங்கள் களையப்பட்டிருக்கும் நிலையில் குறித்த துப்பாக்கிச் சூட்டினை சிவில் உடையில் உள்ள பொலிஸ் புலனாய்வாளர்கள்தான் மேற்கொண்டிருக்கமுடியும் என தாம் நம்புவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

போர் ஓய்ந்த பின்னர் பிஸ்டல் கலாசாரமும் யாழ்ப்பாணத்தில் சற்று முடிவுக்கு வந்திருந்தது. மேலும் வடக்கிலிருந்த துணை ஆயுதக்குழுக்களிடமிருந்து ஆயுதங்கள் களையப்பட்டிருக்கும் நிலையில் பொலிஸ் மற்றும் இராணுவப் படைகளிடமே ஆயுதங்கள் உள்ளதாகச் சொல்லப்படுகிறது. இந்த நிலையிலேயே சுடப்பட்டு தீவிர சிகிச்சை பெற்றுவரும் நபரின் உறவினர்களால் மேற்படி சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.Captureyu8g

படம்: தீவிர சிகிச்சைப் பிரிவின் முன்னால் உறவினர்கள்

இதுகுறித்த மேலதிக விடயங்களை அறிந்துகொள்வதற்காய் எமது இணையத்தளத்துடன் தொடர்ந்தும் இணைந்திருங்கள்!