எதிர்காலத்தில் கல்வி துறையில், பட்டதாரிகள் அல்லது டிப்ளோமா கற்கைநெறியினை பூர்த்தி செய்தவர்களை தவிற வேறு எவரும் இணைத்து கொள்ளப்பட மாட்டார்கள் என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
தேசிய கல்வியியற் கல்லூரிகளில் ஆசிரியர் பயிற்சிகளை பூர்த்தி செய்து வெளியேறிய டிப்ளோமாதாரிகளுக்கான ஆசிரியர் நியமனங்களை வழங்கும் நிகழ்வு நேற்று அலரிமாளிகையில் இடம்பெற்றது.