அண்மையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நாமல் ராஜபக்சவின் நலம் விசாரிப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தங்காலை சிறைச்சாலைக்கு சென்றிருந்தார்.
இதன்போது அங்கிருந்து சிறைக் கைதிகளுடன் மஹிந்த கலந்துரையாடினார்.
“தங்கள் உடல் அமைப்பை சரியாக கடைபிடிப்பதற்கு நாமல் உதவியுள்ளார். பாரம் தூக்குவதற்கும் பயிற்சி வழங்கியுள்ளார் எனவும் கைதிகள் குறிப்பிட்டுள்ளார். “எங்களுக்கும் சிக்ஸ் பேக் உள்ளது” என கூறியுள்ளார்.
சிறையில் பாரம் தூக்கும் பொருட்களை எவ்வாறு பெற்றுக் கொண்டீர்கள் என மஹிந்த கேட்டுள்ளார்.
விளக்குமாறின் இரண்டு பக்கங்களில் நீர் கலன்களை பொருத்தி பாரம் தூக்கும் இயந்திரம் ஒன்றை கண்டுபிடித்ததாக நாமல் குறிப்பிட்டுள்ளார்.
“நாமல் அதிகாலை 5.30க்கு எழுந்து 8.30 மணி வரை பாரம் தூக்குவார், யோகாசனம் செய்வார்” என கைதிகள் குறிப்பிட்டுள்ளார்.
இதபோது வீட்டில் இருக்கும் போதும் நாமல் அதனை சரியாக செய்வார் என மஹிந்த குறிப்பிட்டுள்ளார்.