-
மேஷம்
மேஷம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை, தாமதங்கள் ஏற்படும். சிலர் உங்களிடம்
நயமாகப் பேசினாலும் குடும்ப அந்தரங்க விஷயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம். உடல் நலம் பாதிக்கும். வியாபாரத்தில் புது முயற்சிகள் வேண்டாம். உத்யோகத்தில் மறைமுகத்தொந்தரவு வந்து நீங்கும். வேலைச்சுமை மிகுந்த நாள். -
ரிஷபம்
ரிஷபம்: மூத்த சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாணப் பேச்சுவார்த்தை வெற்றியடையும். மனைவி வழி உறவினர்கள் மதிப்பார்கள். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக்கொள்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். தன்னம்பிக்கை துளிர் விடும் நாள்.
-
மிதுனம்
மிதுனம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். அமோகமான நாள்.
-
கடகம்
கடகம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். வேற்றுமதத்தவர் அறிமுகமாவார். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். புதுமை படைக்கும் நாள்.
-
சிம்மம்
சிம்மம்: எதிர்ப்புகள் அடங்கும். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. பழைய பிரச்னைகளை தீர்ப்பீர்கள். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். நன்மை கிட்டும் நாள்.
-
கன்னி
கன்னி: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். உறவினர்கள் பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வியாபாரத்தில் அனுபவம் உள்ள வேலையாட்கள் அமைவார்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். தைரியம் கூடும் நாள்.
-
துலாம்
துலாம்: குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வர வேண்டிய பணம் கைக்கு வரும். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் உண்டு. உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கிகாரம் கிடைக்கும். தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.
-
விருச்சிகம்
விருச்சிகம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் கொஞ்சம் அலைச்சலும், சிறுசிறு ஏமாற்றமும் வந்து நீங்கும். கேட்டை நட்சத்திரக்காரர்கள் முக்கிய முடிவுகளை தவிர்க்கப் பாருங்கள். மற்றவர்களைப் பற்றி வீண் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் சச்சரவு வரும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.
-
தனுசு
தனுசு: குடும்பத்தினருடன் விவாதங்கள் வந்து போகும். எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். உறவினர்களுடன் மனத்தாங்கல் வரும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.
-
மகரம்
மகரம்: உங்களின் அணுகு முறையை மற்றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றியமைத்துக் கொள்வீர்கள். பிள்ளைகளால் உறவினர்கள் மத்தியில் செல்வாக்குக் கூடும். யோகா, தியானம் என மனம் செல்லும். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் மேலதிகாரி பாராட்டுவார். சிறப்பான நாள்.
-
கும்பம்
கும்பம்: எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பழைய உறவினர், நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். புதுத்தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.
-
மீனம்
மீனம்: கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.