அனுராதபுரம் சிறையினில் 30 வது நாளாக உண்ணாவிரதத்தினில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகள் மூவரது உடல்நிலை மீண்டும் மிகமோசமான கட்டத்தை அடைந்துள்ளது.
இதனையடுத்து அவர்கள் மூவரும் பலாத்காரமாக சிறை அலுவலர்களால் வைத்தியசாலையினில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையினில் அவர்களிற்கு சேலைன்கள் ஏற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெரும்பாலும் அவர்களின் பேசும் திறன் செயலிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.