இந்தியாவிற்கு வருகிறது ஆளில்லா விமானம்

யுதங்கள் அடங்கிய ஆளில்லா விமானமான ‘ட்ரோன்’ எனப்படும் விமானத்தை இந்தியாவிற்கு வழங்குவதற்காக அமெரிக்கா தீவிரமாக பரிசீலித்து வருகிறது.

8_Drone

கடந்த ஜூன் 26-ம் தேதி அமெரிக்காவிற்கு சுற்று பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவிற்கு ஆளில்லா விமானம் வழங்குவது குறித்து அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப்புடன் பேச்சு வார்த்தை நடத்தினார். இந்நிலையில் இதுதொடர்பாக, அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் நேற்று, அந்நாட்டு மூத்த அரசு அதிகாரி ஒருவர், நிருபர்களிடம் கூறியதாவது: தங்கள் ராணுவத்தை நவீனப்படுத்தும் நோக்கில், ஆயுதங்களுடன் கூடிய, ட்ரோன்களை வாங்க, இந்தியா விருப்பம் தெரிவித்துள்ளது. அதன் கோரிக்கையை அமெரிக்க அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

அமெரிக்காவிடம் இருந்து 80 முதல், 100 ட்ரோன்களை வாங்க, இந்தியா விருப்பம் தெரிவித்துள்ளது. இவற்றின் மதிப்பு, 52 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும்.