மெரினா கடற்கரையில் ஜெர்மன் தம்பதியினர் தொலைத்த லேப்ராடர் வகை நாய் தற்போது மீட்கப்பட்டுள்ளது.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மெரினா கடற்கரையில் ஜெர்மனியை சேர்ந்த தம்பதியினர் நாயுடன் நடைபயணம் மேற்கொண்டுள்ளனர். அப்பொழுது எதிர்பாராதவிதமாக அந்த 2 வயதான லேப்ராடர் பகை நாய் காணாமல் போனது. இதனையடுத்து அவர்கள் கொடுத்த புகாரின் பேரில், போலீசாரும் தேடுதல் வேட்டையில் இறங்கினர். இரண்டு வாரங்களாகியும் நாய் கிடைக்காததால், தம்பதியினர் இருவரும் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டனர்.
இந்த நிலையில் பெசன்ட் நகரை சேர்ந்த விலங்கு நலஆர்வலர் விஜயா நாராயணனுக்கு வந்த அழைய்ப்பில் காணாமல் போன நாய் தன்னிடம் இருப்பதாக ஒருவர் கூறியுள்ளார். இதனையடுத்து அவரை நேரில் வரவழைத்து, விலங்கு நலஆர்வலர் ஜெர்மன் தம்பதியினரின் நாயை பெற்றுக்கொண்டார்.