யாழ்ப்பாணம் தட்டாதெரு சந்தியில் இன்று மாலை விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்திருப்பதாக தெரியவருகிறது.
இதுகுறித்து தெரியவருவதாவது,
யாழ்ப்பாணம்-காங்கேசன்துறை வீதிவழியே இளைஞர் ஒருவர் உந்துருளியில் பயணித்துள்ளார். தட்டாதெரு சந்தியை அண்மித்தபோது உள் வீதியிலிருந்து ஹயர்ஸ் ரக வாகனம் ஒன்று பிரதான வீதியில் ஏறியுள்ளது.
இதனால் உந்துருளியில் வந்துகொண்டிருந்த இளைஞர் குறித்த ஹயர்ஸ் வாகனத்துடன் மோதியுள்ளார். இதன்போது ஹயர்ஸ் வாகனத்தின் முன்பக்க கண்ணாடி நொருங்கியதுடன் உந்துருளியும் கடும் சேதத்துக்குள்ளானது.
விபத்தில் தூக்கி வீசப்பட்ட இளைஞர் காயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.