சமீபத்தில் வெளியான மெர்சல் திரைப்படம் மத்திய பாஜக அரசின் ஜிஎஸ்டி மற்றும் பெறுமதிப்புடைய ரூபாய் நோட்டுகள் மதிப்பிழப்பு நடவடிக்கை உள்ளிட்ட செயற்பாடுகளை, அவற்றின் காரணமாக மக்கள் அடைந்த பாதிப்புகளை விமர்சித்திருந்தது. மேற்கண்ட காட்சிகளை படத்திலிருந்து நீக்கிடக்கோரி தமிழக பாஜகவினர் படக்குழுவினுக்கு அழுத்தம் கொடுக்கிற நிலையில், பாஜக கருத்து சுதந்திரத்திற்கு எதிராக செயற்படுவதாக சனநாயக சக்திகள் களமிறங்கிய நிலையில், வாய் மூடி மௌனியாக இருக்கிறார் நடிகர் ரஜினி.
இறுதியாக படக்குழுவினை மட்டும் பாராட்டி நேற்று ட்வீட் செய்துள்ளார். அப்போதும் கூட படக்குழுவினுக்கு அச்சுறுத்தல் விடுகிற பாஜக குறித்து ஓர் வார்த்தை பேசவில்லை.
ஆக, கருத்து சுதந்திரத்தின் குரல்வளையானது நெறிக்கப்படுகிற நிலையிலும் வாய் மூடி மௌனியாக இருக்கிற ரஜினி அரசியல் களத்திற்கு வந்து மட்டும் என்ன செய்துவிடப் போகிறார்.