தற்போது ஆட்சியிலுள்ள மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசினால் கொண்டுவரப்பட்ட பெறுமதிப்புடைய ரூபாய் நோட்டுகள் மதிப்பிழப்பு நடவடிக்கையானது (Demonetisation) ஓர் கொடூரமான பணமோசடி நடவடிக்கையினை விமர்சித்துள்ளார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் தோழர். சீத்தாராம் யெச்சூரி.
சென்னையில் நடைபெற்ற தோழர். சீத்தாராம் யெச்சூரி அவர்களின் நாடாளுமன்ற உரைகளின் தமிழ் தொகுப்பினை வெளியிடும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர், மோடி தலைமையிலான பாஜக அரசினை கடுமையாக சாடினார்.
கார்ப்பரேட்டுகளுக்கான அரசு :
அந்நிகழ்வில் பேசிய அவர் “நாடு சுதந்திரமடைந்ததிலிருந்து மேற்கொள்ளப்பட்ட மிக மோசமான பணமோசடி நடவடிக்கை. மோடி அரசினால் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையானது முழுக்க முழுக்க கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக எடுக்கப்பட்ட செயற்பாடு” என விமர்சித்த அவர், நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியினை குறிக்க கூடிய ஜிடிபியினையும் சிதைத்துப்போட்டுள்ளதாக மத்திய அரசினை கடுமையாக விமர்சித்தார்.