யாருக்கு இரட்டை இலை ; தேர்தல் ஆணையம் விசாரணை..

201703171939474009_Election-Commission-called-admk-both-teams-to-decide-double_SECVPFமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மறைவிற்கு பிறகு பல பிரிவுகளாக பிரிந்து செயல்பட்டு வருகிற அதிமுக அணிகள் அனைத்தும் தங்களுக்கே கட்சியும் ஆட்சியும் சொந்தமென கோரி தேர்தல் ஆணையத்தில் அதிகளவிலான ஆவணங்களை தாக்கல் செய்துள்ள நிலையில், இரட்டை இலை சின்னம் தமக்கே உரித்தானது எனக் கூறி மனுதாக்கல் செய்துள்ள இரு அணிகளிடமும் கடந்த அக்டோபர் 6 ஆம் தேதி விசாரணை நடத்தினர் தேர்தல் ஆணைய அதிகாரிகள்.

யாருக்கு இரட்டை இலை ; தேர்தல் ஆணையம் விசாரணை.. முடிவாகுமா இன்று.!

அதன் பிறகு கடந்த 16 ஆம் தேதியும் தேர்தல் ஆணையத்தில் இரட்டை இலை தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், இன்று மீண்டும் தேர்தல் ஆணையத்தில் விசாரணைக்கு வருகிறது இரட்டை இலை தொடர்பான விவகாரம்.

யாருக்கு இரட்டை இலை ; தேர்தல் ஆணையம் விசாரணை.. முடிவாகுமா இன்று.!

விசாரணையில் பங்கெடுக்க அதிமுகவின் அனைத்து பிரிவுகளும் தேர்தல் ஆணையத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளன.

முன்னதாக, இடையில் இரட்டை இலை சின்னம் தொடர்பாக இறுதி தீர்ப்பை அக். 31க்குள் அறிவிக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.