தேர்தல் ஆணையாளர் உடன் பதவி விலக வேண்டும்!

அடுத்த ஜனவரி மாதத்தில் தேர்தலை நடத்த முடியாது போனால் தேர்தல் ஆணையாளர் பதவி விலக வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

59ed6512ee1d1-IBCTAMILகொழும்பில் நேற்று முன்தினம் சனிக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் சட்டத்தரணிகள் சங்க ஒன்றியம் இந்த கருத்தை தெரிவித்துள்ளது.

அடுத்த வருடம் டிசம்பர் மாதத்திற்கு முன்னர் தேர்தலை நடத்த முடியாது போனால் பதவி விலகுவதாக தேர்தல் ஆணையாளர் கூறியுள்ளார்.

அவரால் ஜனவரி மாதத்தில் தேர்தலை நடத்த முடியாவிடில் அந்தப்பதவியில் இருந்து விலகி, தேர்தலை நடத்தக்கூடிய முதுகெலும்புள்ள அதிகாரியொருவருக்கு அந்த பதவியை வழங்க வேண்டும் என சங்கத்தின் இணைப்பாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.

மக்களின் ஜனநாயக உரிமை பறிக்கப்பட்டுள்ள நிலையில், மக்களின் உரிமைக்காக பாடுபடுகின்ற ஒருவராக இருந்தால் தேர்தல் ஆணையாளர் நீதிமன்ற நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ள வேண்டும்.

சமஷ்டி முறையிலான அரசியலமைப்பொன்றை உருவாக்கும் நோக்கிலேயே அரசாங்கம் செயற்படுவதாகவும், அதனால் சமஷ்டி அரசியலமைப்பு உருவாகும் வரை அரசாங்கம் தேர்தலை ஒத்திவைக்க முயற்சிப்பதாகவும் சட்டத்தரணிகள் சங்கத்தின் இணைப்பாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.