யாழ். அரியாலைப் பகுதியில் நேற்று பிற்பகல் இளைஞர் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவத்தில் குறித்த இளைஞனுடன் சென்ற மற்றுமொரு இளைஞன் சில தகவல்களை வெளியிட்டுள்ளார்.
உதயபுரம் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய டொன் பொஸ்கோ ரிக்மன் எனும் இளைஞர் மீதே குறித்த துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த இளைஞரும் அவரது நண்பரும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போதே இந்த துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.
இதன்போது டொன் பொஸ்கோ ரிக்மனுடன் சென்ற மற்றுமொரு இளைஞன் கருத்து தெரிவிக்கையில்,
“நானும் எனது நண்பனும் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்தோம்.
எமது மற்றுமொரு நண்பனின் மோட்டார் சைக்கிளுக்கு பெற்றோல் இல்லை என்று கூறியதால், எமது மோட்டார் சைக்கிளிலிருந்து சிறிது பெற்றோலை எடுத்துச்சென்று கொடுத்து விட்டு திரும்பி வந்துகொண்டிருந்தோம்.
மணியந்தோட்டம் சந்தியை அண்மித்தபோது எதிரே மோட்டார் சைக்கிளில் முகத்தை மூடிய தலைக்கவசம் அணிந்தபடி இருவர் வந்தனர்.
எம்மை அண்மித்ததும் அவர்களது மோட்டார் சைக்கிள் திடீரென நின்றது.
அதில் பயணித்தவர்களில் ஒருவர் துப்பாக்கியை எடுத்துச் சுட்டார்.