தூங்கினாலே மரணம் உண்டாகும் விநோத நோய் தாக்கிய இளைஞர்!

தூங்கினாலே உயிர் போய்விடும் அபாயகரமான நோயால் பிரிட்டன் நாட்டைச் சேர்நு்த இளைஞர் ஒருவர் பாதிக்கப்பட்டிருக்கிறார். தூக்கமே இல்லாமல் எப்போது தூங்கினாலும் இறந்துவிடுவோம் என்ற பயத்தோடு நாட்களை எண்ணிக்கொண்டிருக்கிறார் அவர்.

இங்கிலாந்தில் உள்ள கோஸ்போர்ட் நகரில் வசிப்பவர் லியம் டெர்ப்பைசையர். 17 வயதுடைய இந்த வாலிபரை அப்பயொரு கொடிய நோய் தாக்கியுள்ளது.
இவர் பிறந்தது முதலே பல்வேறு நோய்களுக்கு உள்ளாகி பெரும் சித்ரவதையை அனுபவித்து வருகிறார். தற்போது அவருக்கு சென்ட்ரல் ஹைப்போ வெண்டிலேஷன் சிண்ட்ரோம் என்னும் நோய் தாக்கியுள்ளது.
உலக மக்கள் தொகையில் 1,500 நபர்களை மட்டுமே தாக்கும் இந்த அரிதான நோயின் தன்மையால் வாலிபரின் பெற்றோர் ஒவ்வொரு நாளும் நரகத்தை சந்தித்து வருகின்றனர்.
இந்த நோய் தாக்கியுள்ள நபர் தூங்கினால் அவரது நுரையீரல் செயல்பாடு முற்றிலுமாக உடனடியாக நின்றுவிடும். அதுமட்டுமில்லாமல், இதயத்துடிப்பின் எண்ணிக்கையில் மாற்றம் ஏற்பட்டு ரத்தக்கொதிப்பும் ஏற்படும்.

தூங்கினால், மூளைக்கு செல்லும் நரம்புகளின் செயல்பாடுகள் நின்றுவிடும்.
இதனால் உடம்பின் பிற உறுப்புகளுக்கு மூளை எவ்வித கட்டளைகளையும் பிறப்பிக்க முடியாது. குறிப்பாக, மூச்சு விடவும் மூளை கட்டளையிடாது.
அந்த இளைஞனின் ஒவ்வொரு இரவும் இறுதி நாள் இரவு புாலவே கழிகிறது என்னும் அச்சத்தில் அவருடைய பெற்றோர்கள் தவிக்கின்றனர்.
ஒரு நாள் கூட நிம்மதியாகவும், முழுமையாகவும் நாங்கள் தூங்கியது இல்லை. மகனின் எதிர்காலத்தை நினைத்தால் மிகவும் அச்சமாக இருக்கிறது’என கவலை தெரிவித்துள்ளார்.
வாலிபரை பரிசோதனை செய்து வரும் மருத்துவர் பேசியபோது, ‘வாலிபரின் எதிர்காலம் நிச்சயத்தன்மை இல்லாதது. ஒவ்வொரு முறை வாலிபர் படுக்கைக்கு செல்லும்போது ‘உயிரை பாதுகாக்க உதவும் கருவிகளை’பொருத்திய பின்னர் தான் தூங்க முடியும்.
இச்சாதனங்கள் பொருத்தாமல் தூங்கினால், அதுவே கடைசி தூக்கமாகவும் இருக்க வாய்ப்புள்ளது’ என வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.