திருநெல்வேலி: நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு தீக்குளித்தனர். இந்த சம்பவத்தால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள , காசிதர்மம் பகுதியை சேர்ந்தவர் இசக்கிமுத்து 27. இவரது மனைவி சுப்புலட்சுமி மற்றும் . மதுசரண்யா4 , அட்சய பரணிகா 1 ஆகிய இரண்டு குழந்தைகள், நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில் இன்று தீக்குளித்தனர். இதே பகுதியை சேர்ந்த ஒருவரிடம் கடன் வாங்கியதாகவும், அவர் இந்த கடனை திரும்ப கேட்டு மிரட்டி அதிக வட்டி கேட்டு வருவதாகவும் போலீசாரிடம் சென்றுள்ளனர். போலீசாரும் கடன் கொடுத்தவருக்கே ஆதரவாக செயல்பட்டனராம். கந்துவட்டி கொடுமை குறித்து கலெக்டர் அலுவலகத்தில், 6 முறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என இசக்கிமுத்து புகார் கூறியுள்ளார்.
படுகாயம் அடைந்த நான்கு பேரும் நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இது குறித்து விசாரிக்கப்படும் என கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறினார்.