திவுலபிட்டிய ஹென்பிட்டிகெதர பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கும் கொள்ளையர்களுக்கும் இடையில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் சந்தேகநபர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.
இதன்போது, சந்தேகநபர்களிடம் இருந்து கைக்குண்டொன்றும் மூன்று துப்பாக்கிகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஒருவரும் சந்தேக நபர்கள் 7 பேரும் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.