விடுதலைப் புலிகளின் தலைமையை விமர்சித்தமை தொடர்பில் அச்சம் கொண்டிருந்ததாக முன்னால் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) தெரிவித்துள்ளார்.
விடுதலை புலிகளின் தலைவரை பயங்கரவாதி என கூறினால் என்ன ஆகுமோ என்ற அச்ச நிலைமையை தாம் எதிர்நோக்கியதாக கருணா குறிப்பிட்டுள்ளார்.
ஆனாலும் பிரபாகரன் தம்மை ஒருபோது துரோகி எனக் கூறியிருக்க மாட்டார் எனவும் கருணா குறிப்பிட்டார்.
மட்டக்களப்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போது கருணா இந்த தகவலை வெளியிட்டார்.