தயாரிப்பாளர் சங்க தலைவரும், நடிகருமான விஷாலது அலுவலகத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விஷால் அலுவலகத்திற்கு வருமானவரித்துறை அதிகாரிகள் அடங்கி குழு தற்போது வந்துள்ளதாக தெரிகிறது. இந்தவிவகாரம் தமிழ் திரையுலகத்தினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
மெர்சல் பட விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்த பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என நடிகர் விஷால் தெரிவித்து இருந்தார். மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அதிமுக அம்மா அணியின் துணைப்பொதுச்செயலாளர் தினகரனை அவரது இல்லத்தில் சந்தித்து பேசி இருந்தார். இந்நிலையில் விஷால் அலுவலத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.