இந்திய அரசின் 90 மில்லியன் ரூபா பெறுமதியில் வாகனங்கள் மற்றும் உபகரண தொகுதிகள் என்பன யாழ் பல்கலைகழகத்தின் கிளிநொச்சி விவசாய மற்றும் பொறியியல் பீடங்களுக்கு இன்று வழங்கி வைக்கப்பட்டன.
இந்த நிகழ்வு இன்று முற்பகல் 11 மணிக்கு கிளிநொச்சி அறிவியல் நகர் விவசாய பீடத்தில் இடம்பெற்றது.
இந்திய அரசின் 90 மில்லியன் ரூபா பெறுமதியில் இன்று 48 மில்லியன் ரூபாவுக்கு இரண்டு அதி சொகுசு பேரூந்துகள், டபுள் கெப் வாகனம் மற்றும் உழவு இயந்திரம் என்பன பல்கலைகழக நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது. மிகுதி தொகுதி வாகனங்கள் மற்றும் உபகரணங்கள் என்பன விரைவில் கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
யாழ் இந்திய துணைத்தூதுவா் ஆர்.நடராஜன் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு இவற்றை கையளித்துள்ளாா். இதன் போது யாழ் பல்கலைகழக துணைவேந்தர் விக்கினேஸ்வரன் மற்றும் பொறியியல், விவசாய பீடங்களின் பீடாதிபதிகள், விரிவுரையாளர்கள் திணைக்களங்களின் தலைவா்கள், மாணவா்கள் ஆகியோா் கலந்துகொண்டனர்.