ஒரு பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டுவரும் நீயா நானா என்று விவாத நிகழ்ச்சி தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளது. வழக்கமாக ஒரு சர்ச்சையான தலைப்பை எடுத்து அதில் இரு அணியினரை விவாதிக்கும்படி தான் இந்த நிகழ்ச்சி இருக்கும்.
இந்த வார நிகழ்ச்சியில் கேரள பெண்கள் அழகா? தமிழ் பெண்கள் அழகா? என இரு தரப்பும் விவாதிக்கும்படி நிகழ்ச்சி பதிவு செய்யப்பட்டது.
ஆனால் பெண்களை காட்சிப் பொருளாகப் பார்ப்பது மட்டுமின்றி, அதை வைத்து விவாதம் நடத்துவதா? என பலரும் கேட்டதால் நிகழ்ச்சி சர்ச்சையில் சிக்கியது.
மனித பெண்ணிய அமைப்பினர் சென்னை பொலிசாரிடம் வழக்கு தொடர்ந்ததால் நிகழ்ச்சியை ஒளிபரப்ப தடை விதித்து காவல் ஆணையர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.
அதனால் நேற்று கேரளா-தமிழ் பெண்கள் விவாதம் ஒளிபரப்பப்படவில்லை. அதற்கு பதிலாக பழைய விவாதம் ஒளிபரப்பப்பட்டது.