மாயமான 3 வயது சிறுமியின் உடல் மீட்பு

அமெரிக்காவில், இரவு நேரத்தில் தந்தையால் கண்டிக்கப்பட்டு, மாயமான சிறுமி ஷெரின் மேத்யூஸின் உடல் மீட்கப்பட்டுள்ளதாக டெக்சாஸ் பொலிசார் அறிவித்துள்ளனர்.

டெக்சாஸ் மாகாணம் டல்லாஸ் நகரைச் சேர்ந்தவர், வெஸ்லி மேத்யூஸ். இவரின் தத்தெடுக்கப்பட்ட மகள் ஷெரின் (வயது 3).

ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக சம்பவம் நடந்த அக்டோபர் 7-ம் திகதி இரவு, ஷெரினுக்கு டம்ளரில் பால் கொடுத்துள்ளார் அவரது தந்தை.

ஷெரின் அதைக் குடிக்காமல், மிச்சம் வைத்ததாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த தந்தை, தண்டனையாக அதிகாலை 3 மணியளவில் ஷெரினை வீட்டை விட்டு வெளியேற்றி, அருகில் உள்ள மரத்தின் அருகே நிற்கவைத்துள்ளார்.

சிறிது நேரம் கடந்து சென்று பார்த்தபோது சிறுமியைக் காணவில்லை. இதனால் பரிதவித்துப் போன மேத்யூஸ் சுற்றுவட்டாரம் முழிமையும் தேடியும் சிறுமியை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனையடுத்து 5 மணி நேறம் கடந்த நிலையில் பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளார்.

தகவல் கிடைத்ததும் டல்லாஸ் நகர பொலிசார் குழந்தையைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். 15 நாள்களுக்குப் பிறகு, ரிச்சர்ட்ஸன் என்ற பகுதியில் உள்ள சுரங்கப்பாதையின் அடிப்பகுதியிலிருந்து சிறுமியின் உடல் கிடைத்துள்ளது. ஷெரினைப் போலவே இருப்பதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். வீட்டிலிருந்து அரை மைல் தொலைவில் சிறுமி இறந்துகிடந்துள்ளார்.

இதனையடுத்து மேத்யூஸ் கைது செய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். ஷெரின் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டபோது, தாயார் ஷினி வீட்டில்தான் உறங்கிக்கொண்டிருந்துள்ளார். மேத்யூஸ் இவ்வாறு செய்ததை அவர் அறிந்திருக்கவில்லை. இதனால், ஷினி மீது பொலிசார் வழக்குப்பதிவு செய்யவில்லை. தற்போது இந்த விவகாரம் தொடர்பாக பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

625.500.560.350.160.300.053.800.900.160.90 (40)