தற்போது பல இடங்களில் பெண்கள் குழுவாக சேர்ந்து LPG GAS கம்பனியின் பெயரைக் கூறி கொள்ளையிடும் சம்பவங்கள் அதிகரித்திருக்கின்றது. அவர்கள் அந்த நிறுவனத்தின் அடையாள அட்டையை வைத்திருப்பதாகவும் மற்றும் அதிக உறுப்பினர் அட்டைகளையும் வைத்து இவ்வாறான மோசடிகள் செய்வதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
உங்கள் வீட்டிற்கு வந்து எரிவாயு அடுப்பு *Gas Stove Maintenance* பராமரிப்பினை சோதனையிட வந்ததாகக் கூறி அவர்கள் உங்கள் வீட்டிற்குள் நுழைய முற்படலாம் எனவும்.
மேலும் ரூபாய் 200/- (Yearly Maintenance) வருடாந்திர அங்கத்துவப்பணம் கேட்பது போல் உங்களிடம் பேச்சுக் கொடுத்து அவர்களிடம் இருக்கும் குளோரோஃபார்மையும் (மயக்க மருந்து) வீட்டில் இருப்போர் மீது தூவி மயக்கமடையச் செய்து வீட்டி இருக்கும் பொருட்களை கொள்ளையிடுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் அவர்கள் தனது குழுவை அழைத்து வீட்டின் நிலைமையை விளக்க முற்படுவதாகவும் உள்ளே வந்து விட்டால் அவர்கள் உங்கள் வீட்டில் , ஒவ்வொரு பகுதியையும் உடைத்து திருடுவார்கள். தற்போது இந்த குழு மிகவும் சுறு சுறுப்பாக இயங்கி வருகிறது.
எனவே, உங்கள் வீட்டில் அவளை அனுமதிக்க வேண்டாம். என பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்துள்ளனர்.
இது தொடர்பாக பல விழிப்புணர்வு தகவல்களை நடிகரும் நடன இயக்குனருமாகிய திரு லோரன்ஸ் பரப்பியவண்ணம் உள்ளார்.