தாய் கனவில் வந்து கூறியதற்கமைய புதையல் தோண்ட சென்ற குழு!

உயிரிழந்த தாய் கனவில் வந்து கூறியதற்கமைய புதையல் தேடிச் சென்ற ஐவரை பொலன்னறுவை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களுள் ஓய்வுப்பெற்ற அதிபர் மற்றும் பொது சுகாதார ஊழியர் ஒருவரும் உள்ளடங்குகின்றனர்.

உயிரிழந்த தாய் கனவில் நித்தமும் வந்து குறிப்பிட்ட இடத்தில் விலைமதிப்பில்லா புதையல் இருப்பதாக கூறியதற்கமையவே புதையலை பெறும் நோக்கில் குறித்த ஐவரும் நேற்று முன் தினம் பகல் வேளையில் பொலன்னறுவை பெரகும் உயன பகுதியல் உள்ள முதியவர் ஒருவர் தனித்து வசிக்கும் வீடொன்றிற்கு சென்று புதையல் தோன்ட ஆரம்பித்துள்ளனர்.

குறித்த ஐவரையும் கைது செய்யும் பொழுது குறித்த நிலத்தை 25 அடிக்கும் மேலாக நிலத்தை தோன்டியுள்ளனர். மேலும் குறித்த இடத்தில் அலவாங்கு, மண்வெட்டி, நீர் பம்பி பூஜை பொருட்கள் மற்றம் எலுமிச்சை பழம் குத்தப்பட்ட திரிசூலம் ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

sandeep2