அரசியல் விவாதங்களில் தூள் கிளப்பி வரும் கஸ்தூரி, ரஜினி அரசியலுக்கு வருகிறார் என்ற போது அவருக்கு ஆதரவு தெரித்தார்.
பின்னர் கமல்ஹாசன் அரசியல் நடவடிக்கைகளுக்கு நடிகை கஸ்தூரி ஆதரவு கொடுத்தார். அரவிந்த் கெஜ்ரிவால் சென்னைக்கு வந்து கமல்ஹாசனை சந்தித்தது குறித்து அப்போது ட்விட்டரில் கருத்து தெரிவித்த கஸ்தூரி, ‘இருவருமே ஊழலுக்கு எதிரானவர்கள். கமல்ஹாசனிடம் இருந்து விரைவில் பெரிய அறிவிப்பு வரும்’ என சிலாகித்தார்.
கமல்ஹாசனை ஒருமுறை நேரில் சந்தித்தும் பேசினார் கஸ்தூரி. கமல்ஹாசனின் ‘பிக்பாஸ்’ பற்றி சர்ச்சை எழுந்தபோதும், கமலுக்கு ஆதரவாகவே கஸ்தூரி கருத்து கூறினார்.
இந்த நிலையில் கமல்ஹாசன் 8 அடி பாய்ந்தால், விஜய் 48 அடி பாய்வார் என நடிகை கஸ்தூரி ‘டிவிட்’செய்து உள்ளார் .
விஜய் ரசிகர்கள் பலரும் கஸ்தூரியின் டிவிட்டர் கணக்கை முற்றுகையிட்டு நன்றி கூறி வருகிறார்கள்.