மீண்டும் மெய்ப்பாதுகாவலரின் வீட்டை தேடிச் சென்ற நீதிபதி!

கடந்த ஜூலை மாதம் யாழ்ப்பாணம் நல்லூர்ப் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்த, யாழ் மேல் நீதிமன்றத்தின் நீதிபதி இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலரது தொண்ணூறாம் ஆண்டு நினைவுச் சடங்குகள் மற்றும் பௌத்தமத அனுட்டானங்கள் நடைபெற்றுள்ளன.

இந்த நிலையில் குறித்த நினைவுச் சடங்கில் கலந்துகொள்வதற்காக நீதிபதி இளஞ்செழியன் மீண்டும் குறித்த மெய்ப்பாதுகாவலர் வீட்டைத் தேடிச் சென்றமை அங்கிருந்த அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாக தெரியவருகிறது.

imageproxy (5)பௌத்த பிக்குகள் தலைமையில் நடைபெற்ற நினைவுச் சடங்கில் குறித்த மெய்ப்பாதுகாவலரின் குடும்பத்தினருடன் ஒன்றாக அமர்ந்து, நீதிபதி இளஞ்செழியன் தனது நினைவஞ்சலியினைச் செலுத்தியுள்ளார்.

கடந்த ஜூலை மாதம் 22ஆம் திகதி நல்லூர் பின் வீதியில், நீதிபதி இளஞ்செழியனை இலக்குவைத்து இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தின்போது அவரது மெய்ப்பாதுகாவலரான 57 வயதுடைய பொலிஸ் சார்ஜன்ட் ஹேமச்சந்திர மரணமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.