இம்முறை கனடாவில் வழக்கத்தை விட அதிகமான பனிப்பொழிவு!

கனடாவின் ஒன்ராறியோவின் பெரும்பாலான பகுதிகளில் வழக்கத்தை விட 10 முதல் 50சதவிகிதம் அதிகமான பனிப்பொழிவு காணப்படும் என AccuWeather நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த குளிர்காலம் குறித்து AccuWeather நிறுவனம் கனடாவிற்கு  தெரிவித்துள்ள செய்தியில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவில் இம்முறை வழக்கத்தை விட அதிகமான பனிப்பொழிவு!

கனடாவின் மத்திய பகுதி மிகுந்த பனி கொண்டதாகவும் மேற்கில் வழக்கத்தை விட அதிக குளிர் கொண்டதாகவும் காணப்படும் என தெரிவிக்கின்றது.

விசேடமாக மத்திய-தெற்கு ஒன்ராறியோ கியுபெக் தென்பகுதி வரை அதிகமான பனிப்பொழிவு காணப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

கனடாவில் இம்முறை வழக்கத்தை விட அதிகமான பனிப்பொழிவு!

இந்த பனிப்பொழிவு டிசம்பர் இறுதி பகுதி தொடக்கம் பிப்ரவரி வரை எதிர்பார்க்கப்படுகின்றது.

வின்ட்சர் ஒன்ராறியோ முதல் ரொறொன்ரோ வரை குறிப்பிடத்தக்க அளவிலான பனிப்புயல் காணப்படும் எனவும் ஒட்டாவா, மொன்றியல் பகுதிகளில் ஜனவரி மற்றும் பிப்ரவரி காலப்பகுதியில் விசேடமாக காணப்படும் எனவும் கூறப்படுகின்றது.

பிரிட்டிஷ் கொலம்பியா, விஸ்லர் பகுதிகளில் இந்த வாரம் ஒரு குளிர் கால புயல் ஏற்பட்டுள்ளது.
புதன்கிழமை கிட்டத்தட்ட 15-சென்ரி மீற்றர்கள் பனிப்பொழிவு ஏற்பட்டது.

கனடாவில் இம்முறை வழக்கத்தை விட அதிகமான பனிப்பொழிவு!

கனடாவின் மேற்கு பகுதியில் விசேடமாக சதுப்பு நிலப்பகுதிகளில் மோசமான வானிலை நடவடிக்கைகள் எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆர்க்டிக் காற்றின் வெடிப்புக்கள் காரணமாக வெப்பநிலைகள் குளிர்காலப்பகுதி பூராகவும் பல தடவைகள் வீழ்ச்சியடையும் என முன்னறிவிப்பு பிரகாரம் தெரியவந்துள்ளது.

இதேவேளை அட்லாந்திக் கனடா வழக்கத்தை விட மிதமான குளிர்காலத்தையும் குறைந்த பனிப்பொழிவையும் கொண்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.