ஸ்ரீலங்காவின் கடற்பிராந்தியத்துக்கு அடுத்த மாதம் 10ஆம் திகதிக்கு முன்னர் 9 போர்க்கப்பல்கள் வருகைத்தரவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
இதன் முதற்கட்டமாக பங்களாதேஷ் நாட்டிற்கு சொந்தமான Somudra Avijan என்ற போர்க்கப்பல் இன்றைய தினம் கொழும்பு துறைமுகத்திற்கு வருகைத்தந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து இந்தோனேஷியா, தென்கொரியா, பங்களாதேஷ், இந்தியா, சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளின் போர்க்கப்பல்கள் இலங்கைக்கு வருகைத்தரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதோடு எதிர்வரும் 26ஆம் திகதி தென்கொரிய போர்க்கப்பல் இரண்டு கொழும்பு துறைமுகத்துக்கு வருகைத்தரவுள்ளது.
இதுதவிர, நவம்பர் மாதம் 2ஆம் திகதி இந்திய போர்க்கப்பலும், 4ஆம் திகதி இந்தோனேஷியாவுக்கு சொந்தமான போர்க்கப்பலும் நவம்பர் மாதம் 7ஆம் திகதி பாகிஸ்தானுக்குச் சொந்தமான போர்க்கப்பலும் 10ஆம் திகதி சீனப் போர்க்கப்பலும் வருகைதரவுள்ளன.
இந்த நிலையில் குறுகிய காலத்தினுள் ஸ்ரீலங்காவுக்கு பல யுத்தக்கப்பல்கள் வருகை தரவுள்ளமை பலரிடையே சந்தேகத்தினைத் தோற்றுவித்துள்ளது.