மொட்டை ராஜேந்திரனுக்கு வந்த வாழ்வை பார்த்தீங்களா..! பொறாமையில் சக நடிகர்கள்…!!

mottai-rajendran-1
இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளிவந்த நான் கடவுள் படத்தில் வெறித்தனமான வில்லனாக நடித்து பிரபலமானவர் சண்டை பயிற்சியாளர் ‘நான் கடவுள்’ ராஜேந்திரன்.


இந்தப் படத்தை தொடர்ந்து ஒரு சில படங்களில் வில்லனாக நடித்த இவருக்கு, காமெடி வேடத்தில் நடிக்கவும் வாய்ப்புகள் குவிந்தன.


இதனால் முழு நேர காமெடியனாக மாறினார் ராஜேந்திரன். இதைத் தொடர்ந்து இவருடைய பாணியில் இவர் நடித்த காமெடிக்கு ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது.


தற்போது இவருக்கும் வடிவேலு, விவேக், கவுண்டமணி, சந்தானம் போல் சோலோ ஹீரோவாக நடிக்க வேண்டும் என்கிற ஆசை வந்து ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க கமிட் ஆகியுள்ளார். இந்தப் படத்தில் இவருக்கு ஜோடியாக கல்யாணி நாயர் நடிக்கின்றார்.


காமெடி நடிகர்கள் அனைவரும் ஒரு நிலையில் உச்சம் தொட்டவுடன், சோலோ ஹீரோவாக கால் பதித்து வரும் நிலையில், பல படங்களில் கதாநாயகனாக நடிக்க வாய்ப்புகள் தேடி வந்தும் இது வரை காமெடியனாக மட்டுமே தற்போது வரை நடித்து வருபவர் சூரி என்பது குறிப்பிடத்தக்கது.