இலங்கையில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு தப்பி சென்ற தமிழர் புதிய வாழ்க்கையை கண்டுபிடித்துள்ளதாக அவுஸ்திரேலிய ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
நடு இரவில், வாழ்க்கை குறித்து ஏற்பட்ட பயம் காரணமாக, யாருக்கு சொல்லாமல் தன் சொந்த நாடான இலங்கை விட்டு வெளியேறிய ரெய்ட் பேதுரு என்பவர் தொடர்பிலேயே செய்தி வெளியாகியுள்ளது.
தமிழ் பின்னணியை கொண்ட பேருது தனது தலையை பதம் பார்க்கவிருந்த துப்பாக்கி தோட்டாவில் இருந்து தப்பினார். எனினும் தனது நண்பர் மற்றும் தன்னுடன் கற்றவர்களை இழந்தவர் அவுஸ்திரேலியாவுக்கு தப்பிச் சென்றார்.
அவரது வாழ்க்கை பயம், பாகுபாடு மற்றும் அநீதி நிரப்பப்பட்டதாகும். ஆனால் அவரது மக்களுக்கு ஒரு சிறந்த வாழ்க்கை பிரதிநிதித்துவம் உருவாக்க வேண்டும் என்ற ஆசை அவரிடம் உள்ளது.
1976 ஆம் ஆண்டில் தலைநகரான கொழும்பிற்கு அருகில் உள்ள ஒரு குடும்பத்தில் பேதுரு பிறந்தார், 1983 ஆம் ஆண்டு வரை இலங்கை அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் உள்நாட்டுப் போர் ஆரம்பிக்கும் வரையில், அவரது தந்தயின் மீனவ வாழ்வாதாரத்தை கொண்டு வாழ்ந்து வந்தார்.
தாய் மற்றும் தந்தை, பேதுரு, அவரது ஐந்து சகோதரிகள் மற்றும் ஒரு தத்தெடுத்த சகோதரியும் 1985 இல் இந்தியாவிற்கு தப்பிச் சென்றனர், அங்கு அவர்கள் தற்காலிக தஞ்சம் அடைந்தனர்.
கலவரங்களும் தமிழ் சொத்துகளும் அழிக்கப்பட்டன, பெண்கள் தெருக்களில் கொல்லப்பட்டனர் என பேதுரு கூறினார்.
1988 ஆம் ஆண்டு அவரது குடும்பம் மீண்டும் இலங்கைக்கு திரும்பியதோடு, புதிய வர்த்தகம் ஒன்றை ஆரம்பித்தது.
இலங்கைக்குத் திரும்பிய போது, அவர்கள் அனைத்தையும் இழந்தனர், மீன்பிடி தொழில், வீடு, தளபாடங்கள், கார் மற்றும் விலையுயர்ந்த பொருட்களை அனைத்தும் திருடப்பட்டது அல்லது அழிக்கப்பட்டன என அவர் கூறினார்.
எனினும் , 1991 ஆம் ஆண்டில் குடும்பம் மீண்டும் கட்டியெழுப்பப்பட்டது. அவர்கள் கடை ஒன்றை ஆரம்பித்தனர். இந்த நிலையில் இராணுவத்தினர் தங்கள் வியாபாரத்தை மீண்டும் அழித்தனர். குடும்பத்திற்கு மீண்டும் சோகமான நிலை ஏற்பட்டது.
என் அப்பாவும் நானும் இழப்பீடு கேட்டு அரசாங்கத்திடம் சென்றோம், எங்களுக்கு 1 மில்லியன் ரூபாவுக்கு மேல் சேதம் ஏற்பட்டது, இது மிகப்பெரிய அநீதியாகும் என்று அவர் குறிப்பிட்டார்.
1997 ஆம் நான் உயர்தர படிப்பை மேற்கொண்ட போது, நாங்கள் நல்ல நிலையில் இல்லை, சாப்பிடுவதற்கு எங்களுக்கு உணவு இல்லை, படிக்க கடினமாக இருந்தது, நான் சிறப்பாக செயற்படவில்லை.
இந்த நிலையில் விடுதலை புலிகளுடன் தொடர்பு என கூறி எனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் சித்திரவதைக்கும் உட்படுத்தப்பட்டனர். குடும்பத்தின் ஒரே ஆண் பிள்ளை நான் என்பதனால் கல்வி அவசியமாக இருந்தது.
இவ்வாறான நிலையில் எனக்கு அதிஷ்டவசமாக இந்தியாவில் கற்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. அதன் பின்னர் அமெரிக்க கல்லூரியில் கற்பதற்கான வாய்ப்பு ஒன்று கிடைத்தது.
2003ஆம் ஆண்டு நான் இலங்கைக்கு திரும்பினேன். எனினும் அங்கு அப்போதும் அதே நிலை காணப்பட்டது. பின்னர் சர்வதேச நிறுவனத்துடன் ஒரு நிர்வாக அதிகாரியாக பணியாற்றினேன். மேலும் இலங்கை பல்கலைக்கழகத்தில் சமூகப் பணியும் செய்தேன். இளைஞர் பாராளுமன்றத்தில் சேர்ந்து தமிழ் கிராமங்களில் நடப்பதைப் பற்றி பேச முயற்சித்தேன்.
அதன் பின்னர் 2009ஆம் ஆண்டு யுத்தம் மற்றும் சுனாமியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிறுவனம் ஒன்றுடன் இணைந்து உதவ ஆரம்பித்தேன்.
இதன் பின்னர் ஏற்பட்ட இராணுவத்தினரின் அழுத்தம் மற்றும் அச்சுறுதல்கள் அதிகரித்தமையினால் நான் யாரிடமும் கூறாமல் அவுஸ்திரேலியாவுக்கு தப்பி சென்றேன்.
அங்கிருந்து 3 வருடங்கள் போராடி மெல்போர்னுக்கு சென்றேன். தற்போது தொழில் வாய்ப்பு பெற்று வாழ வழி கண்டுபிடித்துள்ளேன். அங்கு அஸ்திரேலிய அரசாங்கம் எனது திறமைக்கு ஒரு சந்தர்ப்பம் வழங்கியது என அவர் குறிப்பிட்டுள்ளார்.