‘மெர்சல்’ படம் குறித்து பா.ஜ.க-வின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா தொடர்ச்சியாக கூறிவரும் கருத்துகள் பெரும் சர்ச்சைகளை கிளப்பி வருகின்றன. சமூகவலைதளத்தில் எங்கு பார்த்தாலும் இதே டாப்பிக் தான்.
சிங்கப்பூரில் மருத்துவம் இலவசம் என்பது பொய். இந்தியாவில் பள்ளி, கல்வி, மருத்துவம் ஏழைகளுக்கு இலவசம்.ஜோசஃப் விஜயின் மோடி வெறுப்பே மெர்சல் என பதிவிட்டிருந்தது ஊருக்கே தெரியும்
அதைத் தொடர்ந்து ‘மெர்சல் படத்தை இணையத்தில் பார்த்தேன்’ என்று தனியார் சேனலில் உளரவே, இது பெரும் விமர்சனத்துக்கு உள்ளானது..பின்னர் சமூக வலைதளங்களில் பரவிய காட்சிகளைத்தான் பார்த்தேன் என்று மழுப்பினார்..
மேலும், பா.ஜ.க-வின் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், காங்கிரஸின் துணைத் தலைவர் ராகுல் காந்தி என பலரும் மெர்சல் குறித்து தொடர் கருத்துகளை தெரிவிக்கவே, இந்த விஷயம் இந்திய அளவில் வைரலானது.
‘மெர்சல்’ படம் மீதான சர்ச்சை நாடு முழுவதும் விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது. பா.ஜ.கவைச் சேர்ந்த எச்.ராஜா விஜய்யின் உண்மையான பெயர் ஜோசப் விஜய் என அவரது வாக்காளர் அடையாள அட்டையை ட்விட்டரில் வெளியிட்டார்.
‘மெர்சல்’ படத்தின் வசனங்களை நீக்கக் கோரியிருந்தார் எச்.ராஜா. மெர்சல் படத்தை விமர்சித்தது மட்டுமில்லாமல், விஜய்யின் அடையாள அட்டை புகைப்படத்தை வெளியிட்டு உண்மை கசக்கிறதா என கேட்டது ரசிகர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
அவரின் செயலுக்கு எதிராக பல கருத்துகள் வந்தநிலையில், பாடகி சின்மயி அவருக்கு ட்விட்டரில் பதிலடி கொடுத்துள்ளார். எது கசக்கிறது?
ஒரு தனிப்பட்ட குடிமகனின் அடையாள அட்டையை அவரது ஒப்புதல் இல்லாமல் சமூகவலைதளத்தில் பகிர்வது சட்டரீதியானதா?
நாளை ஏதாவது உண்மையை நிரூபிப்பதற்காக ஆதார் அட்டையை விபரங்களை வெளியிடுவார்களா என சின்மயி கேள்வியால் எச்.ராஜாவுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.