முடிந்தது பரோல்.. மீண்டும் சிறையை நோக்கி பேரறிவாளன்.!

இராஜீவ் கொலைவழக்கில் கடந்த 27 ஆண்டுகளாக சிறைப்பட்டிருக்கும் திரு.பேரறிவாளன் அவர்களுக்கு, தமிழக அரசு அண்மையில் ஒரு மாத காலம் பரோல் என்னும் சிறைவிடுப்பு அளித்தது. பின்னர், பேரறிவாளன் அவர்களின் கோரிக்கையை ஏற்று மேலும் ஒரு மாதகாலம் நீட்டிப்பு அளித்தது.

இந்நிலையில், இரு மாத பரோல் காலம் முடிவுற்ற நிலையில் ஜோலார் பேட்டை இல்லத்திலிருந்து மீண்டும் வேலூர் சிறை நோக்கி போலீசார் பேரறிவாளன் அவர்களை அழைத்துச்செல்கின்றனர்.

முன்னதாக, தமிழக அரசியல் தலைவர்கள் பேரறிவாளன் உள்ளிட்ட ராஜீவ் கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்ட எழுவரையும் நிரந்தரமாக விடுதலை செய்திட வேண்டுமென கோரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.

perarivalandmda6002