வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் தேசிய பிரச்சினைகள் சிங்கள மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்பட வேண்டும் என தேசிய கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோகணேசன் வலியுறுத்தியுள்ளார்.
அவ்வாறான செயற்பாடு ஒன்று முன்னெடுக்கப்படும் பட்சத்தில் தமிழ் மக்களின் பிரச்சினைகளை சிங்கள மக்கள் அறிவார்கள் என கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் மனோகணேசன் இதனை குறிப்பிட்டுள்ளார்.