ஸ்ரீலங்கா கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் விளக்கமறியல் மீண்டும் எதிர்வரும் நவம்பர் 7ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் 12ந்தேதி சிறைபிடிக்கப்பட்ட, தமிழ் நாட்டின் மண்டபம் மற்றும் இராமேஸ்வரம் பகுதிகளைச் சேர்ந்த பன்னிரண்டு மீனவர்களை நான்காவது முறையாக பொலிஸார் ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
குறித்த வழக்கை விசாரித்த நீதிமன்ற நீதிவான் எம்.எம்.ரியாழ், குறித்த மீனவர்களை எதிர்வரும் நவம்பர் 7ந் தேதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
இதனையடுத்து குறித்த மீனவர்கள் அனைவரும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.