சசிகலா அணியின் சார்பில் அதிமுகவின் 46 வது துவக்க விழா இன்று எம்ஜிஆரின் ராமநாதபுரம் இல்லத்தில் கொண்டாடப்பட்டது. இதில், சசிகலா அணியின் துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கியதுடன், அதிமுகவின் 46 வது ஆண்டு துவக்க விழா மலரையும் வெளியிட்டார்.
பின்னர் பேசிய அவர் “அதிமுக 46 வது ஆண்டு விழாவை ராமநாதபுரத்தில் கொண்டாடுமாறு சசிகலா கூறியிருந்ததாகவும், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மீண்டும் தான் போட்டியிட வாய்ப்பு உள்ளது” என்றும் கூறினார்.
“தற்போதுள்ள ஆட்சியாளர்கள் பதவியை காப்பாற்றினால் போதும் என நினைக்கின்றனர் என்றும், இப்போதுள்ள ஆட்சியாளர்களிடம் நீதி, நேர்மையை எதிர்ப்பார்க்க முடியாது என்றும்” டிடிவி தினகரன் பேசினார்.