முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மறைவிற்கு பிறகு அவர் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட சென்னை ராதாகிருஷ்ணன் தொகுதியானது காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த வருட இறுதிக்குள்ளாக ஆர்.கே நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் தேர்தல் ஆணையம் அறிவித்த நிலையில், நாளை ஆர்.கே நகர் இடைத்தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படுமென செய்திகள் வெளியாகியுள்ளன.
முன்னதாக, ஏப்ரல் 12 ஆம் தேதியன்று நடைபெறவிருந்த ஆர்.கே நகர் இடைத்தேர்தல், அதிமுகவினர் வாக்காளர்களுக்கு பணம் அளித்ததாக கூறி ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.