தீபாவளிக்கு வெளியான மெர்சல் படத்தை இந்திய அளவில் வெற்றியடைய செய்தவர்கள் பாஜக தலைவர்கள். தற்போது இந்த பிரச்சனை முடிந்துவிட்டதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
படம் தீபாவளிக்கு வெளியானபோது பரவாயில்லை என்று ஒரு சிலர் கொஞ்சம் சலித்துக்கொண்டனர். ஆனால் அதற்கு மறுநாள் தான் மெர்சலுக்கு உண்மையான தீபாவளி ஆரம்பமானது. அந்த வெடியை பற்ற வைத்த பெருமை தமிழக பாஜக தலைவர்களை தான் சாரும் என்று சொன்னால் அது மிகையாகாது. தமிழகத்தில் பற்ற வைத்த ராக்கெட் வெடியை இந்திய அளவில் ட்ரெண்ட் செய்து படத்திற்கு நல்ல வசூலை பெற்று தந்தனர்.
குறிப்பாக சொல்லப்போனால் இந்த பெருமை அனைத்துமே தமிழிசை சௌந்திரராஜனையும், ஹெச். ராஜாவையும் தான் சேரும். இந்நிலையில் மெர்சல் பிரச்சினை நல்லபடியாக முடிந்துவிட்டது என என்ட் கார்டு போட்டுள்ளார் தமிழிசை.
அப்படி என்ன தான் நல்லபடியாக முடிந்துவிட்டது என்று தான் தெரியவில்லை. ஏனெனில் இவர்கள் கேட்ட ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு காட்சிகள் எதுவுமே நீக்கப்படவில்லை. ஒருவேளை அனைவரும் கழுவி ஊத்தியதால் போதும் என்று நிறுத்திக்கொண்டார்களோ என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.