பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள ‘மெர்சல்’ திரைப்படத்தின் படக்குழுவுடன் நடிகர் கமல் ஹாசன் எடுத்த ஒளிப்படத்தின் பின்னணியில் இருக்கும் பேனர் மெர்சல் திரைப்படத்தை கலாய்க்கும் வகையில் அமைந்துள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
‘மெர்சல்’ திரைப்படம், அபூர்வ சகோதரர்கள், மூன்று முகம், குடியிருந்த கோயில் போன்ற திரைப்படங்களிலிருந்து களவாடப்பட்டதாக படம் வெளியாவதற்கு முன்பிருந்தே பலரும் கூறி வந்தனர்.
இந்த நிலையில், கறுப்பு வெள்ளையில் உருவாக்கப்பட்ட அபூர்வ சகோதரர்கள் திரைப்படத்தின் டிஜிட்டல் பேனரை பின்னணியாகக் கொண்ட ஒளிப்படத்தை வெளியிட்டுள்ளனர்.
குறித்த செயற்பாடானது ‘மெர்சல்’ திரைப்படத்தை மறைமுகமாக கமல்ஹாசன் கலாய்ப்பதற்கு ஒப்பானது என சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன.
இதேவேளை, கமல்ஹாசனுடன் அவர் அலுவலகத்தில் ஒளிப்படமெடுத்துக் கொள்ளும்போது அதன் பின்னணியில் அவர் நடித்துக் கொண்டிருக்கும் திரைப்படத்தின் போஸ்டர் வைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது