யாழில் இளைஞர்களைக் குறிவைக்கும் புலனாய்வு???

அண்மைக்காலமாக யாழ்ப்பாணத்தில் வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளமையால் மக்கள் மத்தியில் அச்சநிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் சில துப்பாக்கி சூட்டுச் சம்பவங்களின் பின்னணியில் புலனாய்வு பிரிவு ஒன்று செயற்படுவதாக, யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியை மேற்கோள் காட்டி யாழ். ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ளும் வகையில் மறைமுகமான கருத்தினை யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி காமினி ஹேவாவிதாரண தெரிவித்ததாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

201703220350074087_Former-Deputy-mayor-of-Dhanbad-Neeraj-Singh-and-3-others_SECVPFமேலும் அச்செய்தியில்,

அரியாலையில் நேற்று முன்தினம் இளைஞர் ஒருவர் இனந்தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

புலனாய்வுப் பிரிவின் துப்பாக்கிச் சூட்டிலேயே இளைஞன் உயிரிழந்தாகப் பெரும் குற்றச்சாட்டு ஒன்று முன்வைக்கப்படுகிறது.

இந்நிலையில் குறித்த இளைஞனை அடையாளம் தெரியாத புலனாய்வு அணி ஒன்றே சுட்டுக்கொன்றதா என்பதைக் கண்டறிவதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர்,

அரியாலையில் பிரதேசத்தில் மணல் அகழ்வு நடைபெறுவது வழக்கம். மணல் அகழ்வு சுற்றிவளைப்புக்கு எமது அதிகாரிகள் சென்றனர். அதனை மக்கள் தவறான எண்ணியுள்ளனர். ஆனால், இந்தச் சம்பவம் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டதா என்பதை ஏற்றுக் கொள்ளவோ அல்லது நிராகரிக்கவோ மாட்டேன். மேலும், துப்பாக்கிச் சூடு தொடர்பில் சில தடயங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. விசாரணைகளை முன்னெடுத்துள்ளோம்’’ என்றார்.

அத்பொதுடன் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் தவிர்ந்த வேறு படைகளின் புலனாய்வு அணி ஒன்று இந்தச் சம்பவத்துடன் தொடர்புபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளதாகவும் குறித்த யாழ். ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.