உள்ளூராட்சி தேர்தல்கள் அடுத்த ஆண்டு நடைபெறுவதற்கான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் வாரம் வெளியாகும் என உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஃபைஸர் முஸ்தபா தெரிவித்தார்.
முன்னதாக, உள்ளூராட்சித் தேர்தல்கள் அடுத்த ஆண்டு ஜனவரி ஆறாம் அல்லது இருபதாம் அல்லது இருபத்தேழாம் திகதிகளில் நடைபெறலாம் என தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்திருந்தார்.
எவ்வாறெனினும், தேர்தல்கள் பின்தள்ளிப் போகலாம் எனவும் பேச்சுக்கள் எழுந்திருக்கும் நிலையிலேயே அமைச்சர் ஃபைஸர் முஸ்தபா மேற்படி தகவலை வெளியிட்டுள்ளார்.