பிரபல திரைப்பட இயக்குநர் ஐ.சி. சசி இன்று உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். 1948 ஆம் ஆண்டு கேரளாவில் பிறந்த இவருக்கு தற்போது வயது 69.
ஐ.வி.சசி, கடந்த சில தினங்களாக உடல் நலமின்றி இருந்து வந்துள்ளார். இதற்காக அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இன்று உயிரிழந்தார்.
இயக்குநர் ஐ.வி. சசி, மலையாளம், தமிழ், இந்தி உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியவர். தமிழில், கமல்ஹாசன் நடித்த அலாவுதீனும் அற்புத விளக்கும், குரு திரைப்படங்களும், நடிகர் ரஜினிகாந்த் நடித்த காளி திரைப்படத்தையும் இவர் இயக்கி உள்ளார்.
ஐ.வி. சசி, இயக்கத்தில் வெளிவந்த அவளோட ராவுகள் படத்தில் நடித்த சீமாவை மணந்து கொண்டார். ஐ.வி.சசி-சீமா தம்பதிக்கு அனு, அனி என்ற 2 மகள்கள் உள்ளனர்.