-
மேஷம்
மேஷம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்- மனை விக்குள் இருந்த மனப்போர் நீங்கும். மாறுபட்ட அணுகு முறையால் பழைய சிக்கல் களுக்கு தீர்வு காண்பீர்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வாகனப் பழுதை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். புதிய பாதை தெரியும் நாள்.
-
ரிஷபம்
ரிஷபம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் மனஉளைச் சல் ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்கள் தன்னைபுரிந்துக் கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். வியாபாரத்தில் வசூல் மந்தமாக இருக்கும். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்படுவீர்கள். பொறுமைத் தேவைப்படும் நாள்.
-
மிதுனம்
மிதுனம்: உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். சகோதரங்களால் பயனடைவீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். தாயார் ஆதரித்துப் பேசுவார். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். நன்மை கிட்டும் நாள்.
-
கடகம்
கடகம்: எதிர்பாராத பணவரவு உண்டு. பழைய உறவினர், நண்பர்களால் ஆதாயம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உங்களின் புதிய முயற்சிகளை அதிகாரி பாராட்டுவார். தொட்டது துலங்கும் நாள்.
-
சிம்மம்
சிம்மம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். பிரார்த்தனைகளை குடும்பத்தினருடன் நிறைவேற்றுவீர்கள். புதுத் தொழில் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். புதுமை படைக்கும் நாள்.
-
கன்னி
கன்னி: சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வந்துப் போகும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். விருந்தினர் வருகை அதிகரிக்கும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.
-
துலாம்
துலாம்: திட்டவட்டமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வியா பாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். தைரியம் கூடும் நாள்.
-
விருச்சிகம்
விருச்சிகம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டு. இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். உற்சாகமான நாள்.
-
தனுசு
தனுசு: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் ஒருவித படபடப்பு வந்து செல்லும். மூலம் நட்சத்திரக்காரர்களுக்கு வீண் டென்ஷன் ஏற்படும். முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க வேண்டி வரும். வியா பாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு குறையும். விட்டுக் கொடுத்துப் போக வேண்டிய நாள்.
-
மகரம்
மகரம்: எதிர்பார்ப்புகள் தாமதமாக முடியும். உறவினர், நண்பர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் விவாதம் வேண்டாமே. போராடி வெல்லும் நாள்.
-
கும்பம்
கும்பம்: சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க
நேரிடும். வாகன வசதி பெருகும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள். -
மீனம்
மீனம்: உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். சாதிக்கும் நாள்.