சிறைச்சாலைக்கு அனுப்பப்படாமல் வைத்திய சாலைக்கு அனுப்பப்பட்ட அரசியல் கைதிகள்

அனுராதபுரம் சிறைச்சாலையில் இருக்கும் அரசியல் கைதிகள் 3 பேர் அவர்களுடைய வழக்குகளை வவுனியா நீதிமன்றுக்கு மாற்ற கோரி கடந்த செப்ரம்பர் மாதம் 25 ஆம் திகதி முதல் உணவு தவிர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

சிறைச்சாலைக்கு அனுப்பப்படாமல் வைத்திய சாலைக்கு அனுப்பப்பட்ட அரசியல் கைதிகள்

இதுவரை அவர்களுடைய கோரிக்கைக்கு தீர்வு கிடைக்கவில்லை.

நேற்றையதினம் அனுராதபுரம் நீதிமன்றில் அவர்களுடைய வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அவர்களின் உடல்நிலை மோசமாக இருந்ததால் அவர்கள் அனுராதபுரம் தேசிய வைத்திய சாலைக்கு உடனடியாக நீதிமன்றால் அனுப்பப்பட்டுள்ளனர்.