சிக்னலில் காரை நிறுத்தாத பெண்: சுட்டு வீழ்த்திய போலீசார்

பிரேசில் நாட்டில் சிக்னலில் நிக்காமல் காரை ஓட்டிச்சென்றதால் சந்தேகமடைந்த போலீசார் சுட்டதில், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

59ef791109c83-IBCTAMIL

ரியோ டி ஜெனிரோ நகரில் உள்ள ரோசின்ஹா பகுதியில் கடந்த சில நாட்களாகவே போதைப்பொருள் கடத்துபவர்களுக்கு இடையே மோதல் நடைபெறுவதால் அங்கு பதற்றமான சூழ்நிலையே காணப்படுகிறது. இதனால் அப்பகுதியில் எப்பொழுதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் மரியா(67) என்னும் ஸ்பெயின் சுற்றுலா பயணி ஒருவர் அந்த குடிசை வழியாக சிக்னலில் நிற்காமல்  காரை ஓட்டியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த காவல்துறையினர், இவர் போதை கும்பலை சேர்ந்தவராக இருக்கக் கூடும் என கருதி துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து பிரேசில் காவல்துறை உயர்நிலை விசாரணைக்கு உடனடியாக உத்தரவிட்டுள்ளது.