மனைவியுடன் தகாத உறவு : நண்பரை கொன்று, துண்டுகளாக்கி குளிர் சாதனப் பெட்டியில் வைத்த நபர் !

இந்தியா டில்லியில் தன் மனைவியுடன் தகாத உறவு வைத்திருப்பதாக சந்தேகப்பட்ட கணவர் தனது நண்பரை கொன்று, கத்தியால் துண்டுகளாக்கி உடற் பாகங்களை குளிர் சாதனப் பெட்டியில் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நண்பரை கொன்று,  துண்டுகளாக்கி  குளிர் சாதனப் பெட்டியில் வைத்த  நபர் !

உணவகம் ஒன்றில் 31 வயதுடைய பாதல் மண்டல் பணியாற்றி வந்தார். தன்னுடன் பணியாற்றி வந்த நண்பன் விபின் ஜோஷிக்கும், தன் மனைவிக்கும் தகாத உறவு  இருப்பதாக, பாதல் சந்தேகம் கொண்டுள்ளார்.

இவ்வாறிருக்க கடந்த,  9 ஆம் திகதி முதல் நண்பன் விபின் ஜோஷியை காணவில்லை என பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது. அதேசமயம் உணவகத்தில் விடுப்பு எடுத்துக் கொள்வதாக கூறிச் சென்ற பாதல் மீது பொலிஸாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

பாதலின் உறவினர் ஒருவர் அளித்த தகவல்படி, ஒடிசா மாநிலம் ரூர்கியில் தலைமறைவாக இருந்த பாதலை பொலிஸார் கைது செய்தனர்.

விசாரணையில் தன் மனைவியுடன் தகாத உறவு  வைத்திருந்ததால், விபினை இறைச்சி வெட்டும் கத்தியால் கொன்றதாகவும்,  பின்னர் உடலை துண்டுகளாக வெட்டி தன் வீட்டு குளிர் சாதனப் பெட்டியில் மறைத்து வைத்ததாகவும் தெரியவந்துள்ளது.