நான் மலையாள பெண்ணல்ல, சுத்த தமிழச்சி – சீறும் சாய்!!

மலையாளத்தில் வெளியான பிரேமம் படம் மூலம் மிகவும் பிரபலமானவர் சாய்பல்லவி. பிரேமம் படத்தில் சாய்பல்லவி மலர் டீச்சர் கேரக்டரில் நடித்து இருப்பார். தற்போது சாய் பல்லவி தெலுங்கு சினிமாக்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

தெலுங்கு ஊடகங்கள் அனைத்து அவரை ‘மல்லு பெண்! மலையாள பொண்ணு!’ என்றே எழுதி வருகின்றன. ஒரு திரைப்பட வெளியீட்டு விழாவில் மலையாள பெண் என்று அவரை கூறியபோது நான் மலையாள பெண்ணல்ல தமிழ் பெண் என அவருடைய அதிருப்தியை தெரிவித்ததாக கூறப்படுகிறது. தெலுங்கு ஊடகங்கள் அவர் மலையாள பெண் என கூறப்படுவதால் கோபப்படுவதாகவும் அவர் ஒரு தமிழச்சி என்று தெளிவுபடுத்தியிருந்தார்.

sai-pallavi-mani-ratnam-movie