போலீஸிடம் சரணடைந்த தாடி பாலாஜி – தொடர் விசாரணை!

விஜய் டிவி -யின் பிரபலமும் மற்றும் நடிகருமான தாடி பாலாஜி தன் மனைவி நித்யாவின் நடவடிக்கையை பற்றி தொடர்ந்து சந்தேக குற்றசாட்டுகளை வெளிப்படையாக கூறி வருகிறார். இந்த
குடும்ப பிரச்சனை காரணமாக சமீப காலமாக பாலாஜி நீதிமன்றத்தை அணுகிவருவது குறிப்பிடத்தக்கது. இவர் கூறும் குற்றச்சாட்டுகளுக்கு இவரது மனைவி நித்யா மறுத்து வருகிறார்.

இந்நிலையில் பாலாஜி தன்னுடைய வீட்டில் தன் மனைவியையும் குழந்தையையும் படுக்கை அறையில் பூட்டி வைத்து தீ பற்றவைத்துள்ளார். அந்த வீடியோ காட்சிகளை நாம் ஏற்கனவே
பார்த்தோம். மேலும் பாலாஜி மனநலம் பாதிக்கப்பட்டவர் என நித்யா கூறியிருந்தார். மேலும் தன் குழந்தையிடம் தவறாக நடந்துகொண்டதாகவும் கூறியிருந்தார்.

இந்த நிலையில் நேற்று காலை 11 மணியளவில் அண்ணாநகரில் உள்ள போலீஸ் துணை கமி‌ஷனர் அலுவலகத்தில் நடிகர் தாடி பாலாஜியிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவரிடம் போலீஸ்
துணை கமி‌ஷனர் டாக்டர் சுதாகர் விசாரணை நடத்தினார். இது சுமார் 2 மணிநேரத்துக்கும் மேலாக நடந்தது. அப்போது தாடி பாலாஜியுடன் அவரது வக்கீல் இருந்தார்.

23-1495508918-balaji-vijaytv