இலங்கை கிரிக்கட் விளையாட்டு துறையை சேர்ந்த உத்தியோகத்தர் ஒருவர் டுபாயில் வசிக்கும் விளையாட்டு மேம்பாட்டு துறையைச் சேர்ந்த, பெண் ஒருவரிடம் தகாத வகையில் உரையாடியுள்ளார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
முனாஷா ஜிலானி என்ற பெண்ணே, இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
குறித்த நபர், வட்ஸ்அப் குறுந்தகவல் வாயிலாக எவ்வாறு உரையாடியுள்ளார் என, குறித்த குறுந்தகவல்களை அவர் டுவிட்டரில் பதிவேற்றம் செய்துள்ளார்.